தஸ்லீமா நஸ்ரின் வங்காளதேசத்திலுள்ள மைமன்சிங் நகரில் 1961 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது எழுத்துக்களின் மீதான அடிப்படைவாதிகளின் தாக்குதலை அடுத்து, அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டதனை அடுத்து, அவர் பிறந்த நாடான வங்காளதேசம் அவரது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க மறுத்துவிட்டது.அவர் அடைக்கலம் புகுந்த மேற்கு வங்காள அரசு அடிப்படைவாதிகளுக்குப் பணிந்து இந்திய மத்திய அரசின் அணுசரணையுடன் கல்கத்தாவிலிருந்து அவரை ராஜஸ்தானுக்குக் கடத்தியது. அவர் வாழவிரும்பிய இந்தியாவிலிருந்து இந்திய அரசு 2008 ஆம் ஆண்டு அவரை நாடு கடத்தியது. தஸ்லீமா நஸ்ரின் அதனது நிஜமான அர்த்தத்தில் நாடற்றவர். நாட்டுக்கு நாடு நாடோடியாக அலைந்து கொண்டிருக்கும் அகதி.