புத்தனின் பெயரால்

1வரலாற்று நூல்களின் வழி நான் வந்து அடைந்த புரிதலை விடவும் ஆழமான புரிதலை இந்தத் திரைப்படங்கள் எனக்கு அளித்தன என்பதனை நான் நிச்சயமாகவே சொல்வேன். முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழமக்கள் வந்து அடைந்திருக்கும் உளவியல் சிக்கல் உக்கிரமான படைப்புமனநிலைக்கு அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது.திரைப்படத்தின் வல்லமையை தூரதரிசன உணர்வுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் உணர்ந்திருந்தார். விடுதலைப் புலிகள், போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்திலும் சரி, போர் ஓய்ந்திருந்த காலகட்டங்களிலும் சரி, குறும்படங்களையும் விவரணப்படங்களையும் அவர்கள் தொடர்ந்து உருவாக்கி வந்தார்கள். விடுதலைப் புலிகளின் காலத்தில் ஈழத் திரைப்படங்கள் புத்துயிர் பெற்றன என்றே சொல்ல வேண்டும்.