மூன்றாவது சினிமா தேசீயக் கலாச்சாரத்தோடு பிணைப்புக் கொண்டது. உலகத்தை கருத்துருவமயப்படுத்துவது பற்றியதே மூன்றாவது சினிமா. மூன்றாவது சினிமா ஒரு சுதந்திரமான சிறந்தவகை சினிமா முடிவுறாதது. முழுமை பெறாதது, முடிந்து போகாதது. அது ஒரு ஆய்வு வகை. ஜனநாயகத் தன்மை கொண்ட தேசீயப்பண்பு கொண்ட வெகுஜனங்களின் சினிமா. மூன்றாவது சினிமா சோதனைபூர்வமான சினிமா. அது தனிமையிலிருந்து ஒருவரது இருப்பிடத்திலோ அல்லது ஒரு சினிமா லாபரட்டரியில் இருந்தோ உருவாக்கப்படுவதில்லை. மூன்றாவது சினிமா தொடப்பு கொள்வதன் மூலம் ஆய்வை மேற்கொள்கிறது. இங்கு நான் ஒன்றை வலியுறுத்திச் சொல்ல வேண்டும் ஒரு வகையில் 36 வகையான மூன்றாவது சினிமாக்கள் இருக்கின்றன என்பதுதான் அது : இலத்தீனமெரிக்க இயக்குனர் பெர்னான்டோ சொலானஸ்.