கார்ல் மார்க்ஸ் : ரோக் டால்டன்

உனது தாடியின் ஆழத்திலிருந்து ஜொலித்த
சிங்கத்தின் மகோன்னத விழிகளிலிருந்து
மூட்டமான விளக்கேற்றப்பட்ட
புழுதிபடிந்த நூலகங்களிலிருந்து
ஜென்னியின்
பால் போன்ற கைகளிலிருந்து
புலம்பெயர்ந்த கடின வாழ்வின்
துக்கத்திலிருந்து
புகைநிரம்பிப ரெய்னீச்
பத்திரிக்கையறைகளின் கோபத்திலிருந்து
முடிவற்ற இரவுகளின்
சின்ன வெளிச்ச அதிரல்களிலிருந்து
கடவுளின் முடமான சிருஷ்டிச்செயலை
நேர்ப்படுத்தியவன் நீ

நம்பிக்கைப் பாவம் சுமந்த மனிதனே
பொறுப்பானவர்க்கெல்லாம் பொறுப்பானவனே
ஹோ, சந்தோஷங்களின் மனிதனே
இன்னும் நீ எம்மிடையில்
நடந்து கொண்டுதானிருக்கிறாய்..

Comments are closed.