இந்தச் சினிமா உலகத்தோடு கட்டிப்புரண்டு வசப்படுத்தாமல் வெற்றியில்லை’ என்று கருதுகிற, புதிதாகச் சாதிக்க நினைக்கிற இயக்குனர்களுக்கு, இலக்கியவாதிகளுக்கு எனச் சமூகமாற்றத்தில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் இப்புத்தகம் யோசிக்கச் சில பிரச்சினைகளை முன்வைத்திருக்கிறது.வெகுஜன சினிமா வீச்சின் மீது கவனம் குவிப்பவர்கள், அதன் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்களுக்கு மாற்றுச் சினிமாவை உருவாக்கும் செயல்போக்கில் இப்புத்தகம் சில விமர்சன அடிப்படைகளையேனும் உருவாக்கும் என நான் நம்புகிறேன்.