பொதுப்புத்தியின் பரந்துபட்ட வெளியீட்டு வகையினமான சினிமாவில் படங்களின் பிம்பத்தின் வழி, காட்சிப்பிரதியின் வழி கருத்தியல் ஆதிக்கம் செயல்படுகிறது. கிராம்ஸி இத்தகைய கருத்தியல் மேலாதிக்கத்திற்கு எதிராக அந்தந்த தளத்திலேயே நம்மைப் போராட்டம் நடத்தக் கோருகிறார்.இவ்வகையில் வெகுஜன சினிமாவில் மரபு ரீதியான ஆதிக்கத்திற்கு எதிராக அதே தளத்தில் எதிர் மேலாதிக்க மாற்றுச் செயல்பாடுகளை, தயாரிப்புக்களை, பட இயக்கங்களை நாம் மேற்கொள்ள முடியும்.