உலக விளிம்புநிலைக் குழந்கைள் சினிமா குறித்த இந்த நூலை எனது அம்மாவுக்கும் இரண்டு வயதில் மரணமுற்ற என் தங்கை அம்சவேணிக்கும் சமர்ப்பித்திருக்கிறேன். என் குழந்தைகள் போலவே எல்லா வகையிலும் எனது இதயத்துக்கு மிகவும் அருகிலானது இந்த நூல். இந்த நூல் எப்படி வரவேண்டும் என நான் கனவு கண்டு கொண்டிருந்தானோ அதனைக் காட்டிலும் இரு மடங்கு அழகுடன், நேர்த்தியுடன், கவனத்துடன் இந்த நூலைக் கொண்டு வந்திருக்கிறார் விலாசினி.