பின் மார்க்;சியம் அல்லது மார்க்சியம் கடந்த இசம் எனத் தமிழகத்தில் மார்க்சிய எதிர்ப்பை மிகநுட்பமாகச் செலுத்தும் அடையாள அரசியல் மற்றும் ஏகாதிபத்திய ஆதரவுத் தன்னார்வ நிதி நிறுவன அரசியலுக்கு எதிரான நடைமுறை ஒளியைத் தரும் கையேடாக ஜேம்ஸ் பெட்ராஸின் இந்தக் குறுநூல் திகழ்கிறது. தமிழக மார்க்சியர்களிடம் இந்தக் குறநூல் பரவலாகச் சென்று சேர வேண்டும் என விரும்புகிறேன்.