நான் மடிந்துபோவதைக் காணவே அவர்கள் விரும்புகிறார்கள்

12பாலஸ்தீனத்தினது மட்டுமல்ல உலக அளவிலும் மகத்தான மக்கள் கவிஞனாகத் திகழ்ந்த, பாலஸ்தீனத்தில் பர்வே எனும் சிற்றூரில் 1941 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி பிறந்த மஹ்மூத் தர்வீஷ், தமது 67 ஆம் வயதில், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி சனிக்கிழமை மதியம் 01.35 மணிக்கு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் ஹெர்மன் நினைவு மருத்துவமனையில் மரணமுற்றார்.தர்வீஷின் அறுபத்தி ஏழு ஆண்டுக்காலக் கவிதைப் பயணத்தில் அவரது வரலாற்றுச் சிறப்பு மிக்கதெனக் கருதப்படுகிற அனைத்துக் கவிதைகளையும் கொண்டதோடு, தர்வீஷ் உலக அளவில் உருவாக்கிய தாக்கத்தையும், ஒரு தனித்த உலக ஆளுமை எனும் அளவில் அவரில் நேர்ந்த மாற்றங்களையும் பாயச்சல்களையும் உள்ளிட்ட, தர்வீஷ் குறித்த ஒரு முழுமையான கவித்துவ சித்திரத்தை தரும் படைப்புக்களின் தொகுதி இது.