மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை

15நோபல் பரிசு பெற்ற நாடகாசிரியரும், குர்திஸ் விடுதலை ஆதரவாளருமான ஹெரால்ட் பின்ட்டர் சொல்கிறபடி, குர்திஸ் மக்களின் துயரமே இக்கவிதைகளைப் பிறப்பித்திருக்கிறது. வலியையும் சோகத்தையும் மட்டுமே இக்கவிதைகள் கொண்டிருக்கவில்லை, கொன்றொழிப்பிற்கு எதிராக வாழ்வதற்கான திடவுணர்;வையும் இக்கவிதைகள் கொண்டிருக்கின்னறன  குர்திஸ் மக்களின் மீதானது கொடுரமான ஒடுக்குமுறை, அதிர்ச்சி தரத்தக்க வகையிலான அவர்கள் மீதான, வெளி உலகினால் அதிகம் கண்டு கொள்ளப்படாத, அவர்களது நிராதரவான கதறல்கள் இக்கவிதைகளில் வெளிப்படுகிறது.இக்கவிதைகள் நிர்வாணமானவை, கோபம் கொண்டவை, அழுத்தமானவை, நம்மைப் பற்றிப் பிடிப்பவை. இக்கவிதைகள் நேரடியான உடனடி அனுபவங்களில் இருந்து பிறக்கின்றன. இவை மொழியின் ஆழம் வாய்ந்த கவிதைகள்., நம்மை அசைத்து நிறகும் கவிதைகள்.