அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அலையடித்த ஆப்ரிக்க தேசியவிடுதலைப் போராட்டங்கள் அகஸ்டினோ நெட்டோ போன்றவர்களைப் புரட்சியாளர்களாக மட்டுமல்ல கவிஞர்களாகவும் உருவாக்கியது. தென் ஆப்ரிக்கா முதல் மொசாம்பிக் வரையிலான தேசியவிடுதலைப் போராட்ட அனுபவங்களைப் பதிவு செய்யும் கவிதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.