ஆல்பர்டோ மொராவியோவின் சலிப்பு

ஆல்பர்ட்டோ மொராவியோ ஆயிரத்தித் தொளாயிரத்துத் தொன்ணூறாம் ஆண்டு, செப்டம்பர் மாதம் இருபத்தி ஆறாம் திகதி, தமது எண்பத்து மூன்றாம் வயதில் மரணமுற்றார். இத்தாலிய திரைப்பட இயக்குனரான பெர்னார்டோ பெர்ட்டலூசி இத்தாலிய நாவலாசிரியரான ஆல்பர்டோ மொராவியோவின் அரசியல் நாவலான கன்பார்மிஸ்ட் எனும் படைப்பை அதே பெயரில் திரைப்படமாக்கினார். கிறித்தவ மத வட்டாரங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய பெர்ட்டுலூசியின் பாலுறவுப் படமான தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் படத்திற்கு ஆதரவாகக் கிறித்தவ மதவாதிகளுடன் கடுமையாக வாதிட்டார் அதே ஆல்பர்டோ மொராவியோ. ஆல்பர்டோ மொராவியோவின் பாசிச எதிர்ப்பும், அவரது கம்யூனிசச் சார்பும் அவரது இறுதி நாவல்கள் வரையிலும் தொடர்ந்தது. அதிகாரம் – பணம் – பாலுறவு போன்றவைதான் அவருடைய நாவல்களில் அதிகமும் பேசப்பட்ட பெரும் பிரச்சினைகள். மரணத்திற்குச் சில வருடங்கள் முன்பாக இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தேடுக்கப்பட்டார்.

ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தி மூன்றாம் ஆண்டு வெளியான மொராவியோவின் நாவலான சலிப்பு (இத்தாலிய மொழியில் La Noia ; அமெரிக்க ஆங்கிலத்தில்  Boredom ; இங்கிலாந்தில் The Empty Canvas; பிரெஞ்சில் L’ennui) இரண்டு முறைகள் திரை வடிவம் பெற்றது. ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்தி மூன்றாம் ஆண்டில் இத்தாலிய திரைப்பட வடிவம் வெளியானது. மொராவியோவின் மரணத்தின் பின்பு ஆறு ஆண்டுகள் கழித்து, ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்று ஆறாம் ஆண்டில் சலிப்பின் பிரெஞ்சுத் திரைவடிவம் வெளியாகியது. பிரெஞ்சுத் திரைவடிவத்தினை பிரான்சின் புகழ்பெற்ற பாலுறவுத் திரைப்பட இயக்குனரான காதரின் பிராய்லெட்டின் துணை இயக்குனரான செட்ரிக் கான் இயக்கியிருக்கிறார்.

ஆல்பர்டோ மொராவியோ பிராய்டின் இணைவிழைச்சுக் கோட்பாட்டையும் மார்க்சியத்தின் அந்நியமாதல் கருத்தாக்கத்தையும் இலக்கியத்தில் இணைக்க விழைந்தவர். பிரச்சினைகளின் சிக்கல்களில், பாலுறவு நாட்டம் என்பது பிரபஞ்சமயமானதொரு நோக்கமாக இருக்குமெனில், பொருளாதாரமும் அதே வகையில் பிரபஞ்சமயமானதொரு நோக்கமேயாகும் எனக் கருதியவர் ஆல்பர்டோ மொராவியோ. அந்நியமான மனிதன் அல்லது மனுஷி, அதன் காரணம் கொண்டே உலகின் யதார்த்தங்களுடன் உறவுகொள்ள இயலாமையினால் சலிப்புக்கு ஆட்படுகிறார்கள் என்றார் அவர். சலிப்பு என்பது பெரும் பணக்காரர்களுக்கு ஒரு ‘சலுகையாக'(privilege) இருக்கிறது எனவும் அவர் கருதினார். ‘யதார்த்தத்துடன் உறவு கொள்ளவியலாத அவர்கள் பாலுறவில் அல்லது பொருளாதாரத்தில் அதிகாரம் செலுத்துவதன் வழி – அல்லது இவைகளது கரைகாண்பதாக ஆழ மூழ்குதலின் வழி – அவர்கள் எதிர்கொள்ளும் சலிப்பினின்று வெளியேற முடிவதாக அவர்கள் கருதுகிறார்கள்’ என்கிறார் மொராவியோ. இந்தச் சலிப்பிலிருந்து மீளுதல் என்பதனைத் தான் பாலுறவு – அதிகாரம் – பொருளியல் என்பதன் வழியாகத் தனது நாவலில் கையாளுகிறார் மொராவியோ.

நடைமுறை வாழ்வில் ஒரு கடப்பாடுடைய அரசியலையும் கருத்தியலையும் வலியுறுத்தும் மொராவியோ, கலைப் படைப்பில் கருத்தியலிலிருந்து விலகிய இலக்கியத்தின் சுயாதீனத் தன்மையைக் கோருகிறார். படைப்பில் செயல்படும் கருத்தியல் என்பது எப்போதும் கூடார்த்தத் தன்மை கொண்டதாகவும்,  சுயமுரண்கொண்டதாவும் இருக்க வேண்டும் என்கிறார் அவர். இவ்வகையில் தேர்ந்த அரசியல் நாவலாசிரியர் தாஸ்த்தயேவ்ஸ்க்கி எனவும் அவர் குறிப்பிடுகிறார். சுயமுரணும் கூடார்த்தமும் கொண்டு இயங்கும் பாத்திரத்தின் செயல்பாடுதான் கலைப்படைப்பில் முக்கியம் எனக் கருதுவதன் வழி, மனிதன் அல்லது மனுஷியின் இயல்பூக்கம்தான் இலக்கியத்தில் திர்மானிப்பதாக இருக்கும் எனவும் ஆல்பர்டோ மொராவியோ கருதுகிறார். இந்த இயல்பூக்கம் என்பது மனித வாழ்வில் பாலுறவு நோக்கங்களை எய்துவதாகவே அமைகிறது என்கிறார் ஆல்பர்டோ மொராவியோ.

தனது மரணம் என்பது ஒரு வாகன விபத்தில்தான் நேரும் எனக் கருதியபடி முதல் காட்சியில் நமக்கு அறிமுகமாகும் பிரெஞ்சு தத்துவப் பேராசிரியனான மார்டின், படத்தின் இறுதிக் காட்சியில் வாகனத்தை ஓட்டியபடி, தனது விறைத்த குறியை வாயினால் உறிஞ்சச் சொல்லியபடி, அவன் தொடைகளுக்கிடையில் குனிந்திருக்கும் ஒரு விiமாதுவுக்குக் கட்டளையிட்டபடியே, எதிரில் வரும் மரத்தில் சென்று மோதி விபத்துக்குள்ளாகி உயர்தப்புகிறான். மார்டின் நமக்கு அறிமுகமாகும்போது, தான் ஆறு மாதங்களாகப் பிரிந்திருக்கும் மனைவியைப் பூங்கொத்துடன் தேடிச் சென்று பார்ப்பவனாக அறிமுகமாகிறான். அவன் மனைவி சோபியா ஒரு மனநல மருத்துவர். பாலுறவில் ஈடுபட்டு மார்டினுக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாகிறது. தனக்கு உடல் நிலை சரியில்லாதவனாக உணரும் மார்டின் மருத்துவரிடம் சோதனைக்குச் செல்கிறான். மருத்துவர ஏதேனும் ஒரு இளம்பெண்ணுடன் கொஞ்சநாள் சுற்றுப்பயணம் போய்வாருங்கள் என்கிறார்.

தான் ஒரு புத்தகம் எழுதப் போவதாகவும், ‘பாலுறவிலிருந்து விலகித் தன்னை உன்னதம் நோக்கிச் செலுத்திக் கொள்ளாத எவனும் மிருகமாகிப் போவான்’ எனவும் சொல்கிறான் மார்ட்டின். ‘என்றால் உங்களுக்கு வேண்டியவர் ஒருமனநல மருத்துவர்’ என்கிறார் உடல்நல மருத்துவர். ‘மனநல மருத்துவர்கள் அதீதப் பகுத்தறிவவாதிகள், நான் தத்துவப் பேராசிரியன், சரிவராது’ என்கிறான் மார்டின். மனம்போனபடி பாரிஸ் நகரத்தின் தெருக்களில் வாகனம் ஓட்டி வரும் மார்டின், வாகனத்தை தற்காலிகமாக சாலையோரத்தில் நிறுத்தி, பிரெஞ்சு உருளைக் கிழங்கு வறுவலைச் சுவைத்தபடி வாகனத்திற்குக் கொஞ்சம் முன்பாக ஆரத்தழுவி முத்தமிட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஜோடியை வெறித்தபடியிருக்கிறான்.

அவ்வேளை தலை முழுக்கவும் மழித்த ஒரு வயதுமுதிர்ந்த ஆண், குட்டைப் பாவாடை அணிந்த ஒரு பதின்மவயதுப் பெண்ணின் இடையைத் தழுவியபடி நடப்பது அவனுக்குத் தெரிகிறது. அவனது பார்வை அவர்களைத் தொடர, வாகனத்தை அவர்களை நோக்கித் திருப்புகிறான். கொஞ்சதூரம் நடைபாதையில் தழவியபடி நடக்கும் அந்த இருவரில், பதின்ம வயதுப்பெண் அந்தப்பெரியவரின் கையைத் திடீரெனத் தட்டிவிட்டுவிட்டு, அவர் கெஞ்சக் கெஞ்ச அவரிடமிருந்து விலகி நடந்து மறைந்து போய்விடுகிறாள். சோர்வுடன் நடக்கும் முதியவர் ஒரு மதுவிடுதிக்குள் நுழைகிறார். வாகனத்தைப் பாதையோரம் நிறுத்திவிட்ட மார்டின் அவரைப் பின்தொடர்ந்து மதுவிடுதிக்குள் நுழைகிறான். முதியவர் தன்னந்தனியே சோர்ந்த நிலையில் தியானம் செய்கிற மாதிரியில் அமர்ந்திருக்கிறார். அவர் சிறிதுநேரத்தில், குடித்ததற்காக பணம் கொடுக்கப் போகையில் அவரது பணப்பை தவறிப்போயிருப்பதை அறிகிறார். தான் ‘வீட்டுக்குச் சென்று பணம் எடுத்து வந்து தருவதாக’ச் சொல்லிவிட்டு அவர் வெளியேறுகிறார். மதுவிடுதியைச் சேர்ந்த மதர்த்த பணியாள் அவரை மறித்து ‘பணம் கொடுத்துவிட்டுப் போ’ என அருகிலிருக்கும் சாக்கடையில் தள்ளி முதியவரை முகத்தில் குத்துகிறான்.

முதியவர் நிலை தடுமாறிச் சாய்கிறார். மார்டின் அவருக்காகத் தான் பணம் தருவதாகச் சொல்லி அவரை மீட்கிறான். முதியவர் ஒரு ஓவியர். மெயர் அவரது பெயர். தனக்காகப் பணப் பொறுப்பேற்றுக் கொண்டதையிட்டு மார்டினிடம் நன்றி தெரிவிக்கும் அவர், மார்டினிடம் நன்கு மூடிக்கட்டப்பட்ட ஒரு ஓவியத்தைக் கொடுத்து, ‘இதில் என் முகவரி இருக்கிறது, அங்கு வாருங்கள், நான் நீங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். அதுவரை இதனை வைத்துக் கொள்ளுங்கள்’ எனக் கூறிவிட்டு விடைபெறுகிறார். அவரைத் தேடிச் செல்லும் மார்டினை அவரது மூடுண்ட அறைக்கதவு வரவேற்கிறது. அண்டை வீட்டின் கொழுத்த பெண்மணி, ‘ஓவியர் நேற்று மதியம் இறந்துவிட்டார்’ என்கிறாள். ‘அதுவும் விசேஷமான ஒரு பொழுதில் மரணமுற்றிருக்கிறார்’ என்கிறாள். அதாவது, ‘அவர் தனது மாடலுடன் புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமுற்றிருக்கிறார’ என்கிறாள்.

அறைக்கு வரும் மார்டின் ஓவியத்தைப் பிரித்துப் பார்க்கிறான். பின்புறத்தில் தனது குறியைக் காட்டியபடி குனிந்த நிலையில் அம்மணமாக இருக்கும் பெண்ணின் ஓவியம் அது. ஏதோ ஞாபகம் வந்தவனாக ஓவியரின் இருப்பிடத்தைத் திரும்பவும் தேடிப் போகிறான் மார்டின். இப்போது ஓவியரின் வீட்டுக் கதவு திறந்தபடியிருக்கிறது. உள்ளே நுழையும் மார்டின் எங்கெங்கிலும் பெண்ணின் அம்மண ஓவியங்கள் இறைந்து கிடப்பதைக் காணுகிறான். நின்றும் படுத்தும் ஒருக்களித்தும் பலபெண்களுடன் முயங்கியும் என வெளிப்படையான பாலுறவை வெளிப்படுத்தும் பெண்களின் பெருத்த உடல்கள் கொண்ட ஓவியங்கள். மாடியிலிருந்து யாரோ இறங்கிவரும் ஓசை கேட்கிறது. ‘தான் ஓவியரது மாடல்’ எனவும், ‘இந்த வீடு காலி செய்யப்படுவதற்கு முன்பாகத் தனது உடமைகளைத் தான் எடுக்க வந்திருப்பதாகவும்’ தெரிவிக்கிறாள் அவள். அவள்தான் ஓவியரது மரணத்தின் முன்பு அவருடன் பாலுறவு கொண்டவளா எனக் கேட்டு நிச்சயப்படுத்திக் கொள்ளும் அவன், அவர்கள் பாலுறவு கொண்டிருந்த படுக்கையைக் காட்டுமாறு அவளிடம் கேட்கிறான்.

அவள் படுக்கையைக் காட்டுகிறாள். தான் விரும்பியபோது பாராமுகம் காட்டிய ஓவியரது இருப்பிடத்திற்குத் தனது தோழி ஒருத்திக்கு மாற்றாகத் தான் வந்ததையும், அவர்மீது அப்போது தான் காதல் கொண்டிருந்ததையும், ஆரம்பத்தில் நாளொன்றுக்கு ஒரு முறை என இருந்த அவருடனான கலவி, பிற்பாடு நாளொன்றுக்கு மூன்று முறை என ஆனதையும் அவள் நினைவுகூர்கிறாள். தன் மீது 65 வயதான ஓவியர் அதீதக் காதல் கொண்டிருந்ததாகவும், ‘தன்னால் இயலாவிட்டாலும் தன்னோடு அவள் புணர்ச்சியில் ஈடபடவேண்டும்’ என அவர் தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும், ‘நான் மரணமுற்றுவிடுவேன் எனத் தோன்றினலும் நில்லாது அவள் புணர்ச்சியைத் தொடரவேண்டும்’ எனத் தன்னைக் கேட்டுக் கொண்டதாவும் அவள் தெரிவிக்கிறாள். பின்னாட்களில் ‘அவள் இல்லாமல் தான் உயிர்வாழ முடியாது’ என ஓவியர் தெரித்தததாகவும் அவள் தெரிவிக்கிறாள். பின்னாளில் அவரிடம் தான் சலிப்புற்றதாகவும், முன்பு போலத் தான் அவரைக் காதலிக்கவில்லை எனவும் அவள் மார்டினிடம் தெரிவிக்கிறாள்.

அவளது பதில்கள் அனைத்தும் தன்னைத் துருவித் துருவிக் கேள்வி கேட்கும் மார்டினுக்கான எதிர்விணையாகவே வருகிறது. இப்போது மார்டினுக்கு அவளது அடங்காத பாலுறவு வேட்கை புலப்படுகிறது. பாலுறவு குறித்த குற்றவுணர்வு ஏதுமற்ற, நன்மை தீமைக்கு அப்பால் அதனை அனுபவம் கொள்கிற அவளது பெயரும் அவனுக்குத் தெரிகிறது. அவள் பெயர் சிசிலியா. அவள் பதினேழு வயதே ஆன இளம்பெண். ஓவியம் கற்பதாக வீட்டில் சொல்லிவிட்டு வந்து மாடலாக இருப்பதோடு தனது தாத்தா வயதுள்ள (இதனை மார்டின் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகிறான். சிசிலியாவின் தாயும் மெயர் சிசிலியாவுக்குத் தாத்தா போன்றவர் என்கிறாள்) மெயருடன் புணர்ச்சி விளையாட்டிலும் ஈடபட்டிருக்கிறாள் சிசிலியா என்பதை மார்டின் அறிகிறான். அவள் அவனது தொடர்ந்த கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், ‘நீ ஏன் இதனையெல்லாம் என்னிடம் கேட்கிறாய்?’ என்று சொல்லியபடி அறையிலிருந்து வெளியேற எத்தனிக்கிறாள். ‘எங்கே செல்கிறாய்?’; என்று கேட்டபடி அவளது உடலின் அருகில் வந்து, அவளது முகத்தை நேரடியாகப் பார்க்கிறான் மார்டின். புன்னகைத்தபடி மார்டினை தெளிவுடன் பார்க்கிறாள் சிசிலியா.

அறைக் கதவை மார்டின் திறக்க, சிசிலியா மார்டினின் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்துகிறாள். ‘நேரம் தவறாமல் வந்துவிட்டாய்’ என மார்டின் சொல்லிக் கொண்டிருக்க, ஆடைகளைந்து முழு அம்மணமாகும் சிசிலியா, எந்தவித தயக்கமும் அற்ற வகையில் அவனோடு புணர்ச்சியில் ஈடுபடுகிறாள். தரைப் பலகையில் கட்டில் அழுந்தி அழுந்தி எழும் சப்தம் கேட்க அவளது பின்புறம் இயங்குவது தெரிய, உச்சத்தில் மார்டின் அவளைத் தன்மீது கவிழ்த்துக் கொள்வது தெரிகிறது. தொலைபேசிக்கு முன்பாகச் சாய்ந்த நிலையில், வராண்டாவில் புறப்பட்டுப் போகின்ற நிலையில், கதவு நிலையில் என்று கிளர்ந்து நின்று மார்டின் சிசிலியாவுடன் புணர்ச்சியிலீடுபடுகிறான். அனைத்திலும் தன்னை முற்றிலுமாக ஒப்புக் கொடுத்துவிட்டு புணர்ச்சி எனும் தூய அனுபவத்தில் ஆழ்கிறாள் சிசிலியா. அவள் பேசுவதில்லை. அவளிடம் எதற்கும் திட்டவட்டமான பதில்கள் இல்லை. மார்டின் தனது முன்னாள் மனைவியிடம் ஒரு முறை சொல்கிறான் :  ‘அவளது வாயை விடவும் அவள் அகலக் கால் விரித்தபடியிருக்கும் வேளையில் அவளது குறி அதிகம் பேசுகிறது’ என்கிறான்.

தன்னோடு உரையாடாத அவளிடமிருந்து விலகிவிட அவன் எத்தனிக்கிறான். ஒரு கலவியின் போது ஒரு அடிமையைப் போல அவன் அவளை நடத்துகிறான். புணர்ச்சிக்குத் தயாராக அவள் அவன் மீது கவிகிறபோது, ‘தன்னால் வெளிச்சத்தில் உறவுகொள்ள முடியாது, திரைச் சீலைகள் முழவதையும் மூடிவிட்டு வா’ என்கிறான். எழுந்து சென்று ஒவ்வொன்றாக அவள் திரைச் சீலைகளை மூடிவிட்டு வருகிறாள். பிற்பாடு படுக்கப் போகையில், மறுபடி ‘படுக்கையறைக் கதவு திறந்திருக்கத் தன்னால் உறவு கொள்ள முடியாது’ என்கிறான். அவள் எழுநது படுக்கையறைக் கதவை மூடுகிறாள். பிற்பாடு படுக்க வர, ‘சிகிரெட்டை எடு’ என்கிறான். அதனை அவள் எடுத்து வீச, ‘கொஞ்சம் பொறு, வத்திப் பெட்டியையும் எடு’ என்கிறான். அதையும் எடுத்து வீசுகிறாள். ‘இன்னும் இரண்டே இரண்டு வேலைகள் இருக்கிறது’ என்கிறான். அவள் ஒடுங்கியபடி நாற்காலியில் அமர்கிறாள். ‘இதற்கு மேல் ஒன்றும் இல்லையே?’ என்கிறாள் அவள். ‘சமையலறையில் சமையல் வாயுவை மூடிவிட்டு, விளக்கை அணைத்துவிட்டு வா’ என்கிறான். பிற்பாடு ‘என்னை மன்னித்துவிடு’ என்றபடி மூர்க்கமாக, மிருகத்தனமான வன்முறையுடன் அவளுடன் புணர்ச்சியில் ஈடுபடுகிறான். அவள் முற்றிலும் அவனிடம் தன்னைச் சரணடைய வைத்துவிட்டிருக்கிறாள். அவளை முழுக்கவும் தனவசப்படுத்துவது, ஒரு சரக்கைப் போலத் தனது உடமையாக்குவது என்பதில் இப்போது அவன் வெற்றி பெற்றிருக்கிறான். அவள் மீது அவனது ஈடுபாடு என்பது இப்போது மிகவும் மலினப்பட்டதாக இருக்கிறது.

காட்சி மாறுகிறது. நேரத்திற்கு வரவேண்டியவள் வரவில்லை. தொலைபேசியும் வருவதில்லை. காத்திருப்பு அவனுக்குச் சகிக்க முடியாததாகிவிட்டது. தொலைபேசிகளை சுவற்றில் ஓங்கி அடித்து உடைக்கிறான். ‘தான் அவளைக் காதலிக்கிறேனோ?’ என அவன் தன்னைச் சந்தேகிக்கிறான். அவளைத் தேடிச் செல்லும் அவன் அவளை பிறிதொரு இளைஞனுடன் சந்திக்கிறான். அவனது பெயர் மெமோ. அவளது நாடக நண்பன். அவன் அவளைத் திரைப் படத்துறையில் சேர்த்து விடுகிறேன் எனச் சொன்னதாகப் பிற்பாடு சிசிலியா மார்டினிடம் சொல்கிறாள். மார்டின் கொதிப்பில் பொறாமைக்கு ஆட்படுகிறான். மெமோவுடன் நாட்களைக் கழிப்பதன் பொருட்டு, மார்டினிடம் ‘வாரத்திற்கு இருமுறைதான் வருவேன்’ என்கிறாள் சிசிலியா. மெமோவுடனான சிசிலியாவின் உறவு பாலுறுவு ரிதியானதும் என அறியா நிலையிலும், அவனது அண்மையினால் பொறாமையுறும் மார்டின், அதன் பின்னான தருணங்களில அவளுடன் வன்முறையில் புணர்ச்சியில் ஈடுபடுகிறான். ‘அந்த அனுபவும் முன்னைப்போல் இல்லாமல் வித்தியாசமானதாக அற்புதமாக இருக்கிறது’ என்கிறாள் சிசிலியா.

சிசிலியா மெமோ உறவின் தன்மையை அறிவதற்கக அவர்கள் அறியாது அவர்களைப் பின் தொடர்கிறான் மார்டின். அவள் அவனுடனும் உடலுறவில் ஈடுபடுகிறாள் என்பதை அறியும் மார்டின், ‘நீ ஒருவேசை’ என்கிறான். அவளால் மார்டினைப் புரிந்துகொள்ள முடியவில்ல. தான் இருவரையும் நேசிப்பதாக அவள் சொல்கிறாள். ‘நீ என் மீது வன்முறை செலுத்துகிறாய், நான் போகிறேன்’ என வாகனத்தை விட்டு இறங்குகிறாள். அவளை நகரத்தின் வெளியில் ஒரு மரங்களடர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்லும் மார்டின் வாகனத்தில் இருந்த நிலையில் அவளுடன் கிளரச்சியுடன் பாலுறவில் ஈடுபடுகிறான். அவளுக்குப் பணம் தருகிறான். ‘நான் பணம் தருகிறேன். அவனை விட்டு விடு’ என்கிறான் மார்டின். ‘உன்னை நான் மணந்து கொள்கிறேன்’ என அவனது பெற்றோரிடம் அவளை அழைத்துச் செல்கிறான். அங்கு அவள் அவனுடன் அந்த நேரத்திலேயே பாலுறவு கொள்ள விரும்புகிறாள். ஆனால், அவனை மணக்க முடியாது எனத் திட்டவட்டமாகச் சொல்கிறாள்.

‘நான் மெமோவை இழக்க முடியாது’ என்கிறாள். ‘உன்னையும் இழக்க முடியாது’ என்கிறாள்.  ‘எவரையும் மணந்து கொள்ள முடியாது, என்னிடம் கடவுள் நம்பிக்கை இல்லை’ என்கிறாள். ‘பாலுறவில் எவரிடம் நீ அதிக சந்தோசத்தை அல்லது கூடக் குறைய அனுபவிக்கிறாய்?’ என்கிறான் மார்டின். அவள் ‘தெரியாது’ என்கிறாள். ‘அப்படிச் சிந்தித்ததில்லை’ என்கிறாள். ‘இரண்டு அனுபவங்களும் வித்தியாசமானது. அது சந்தோசம் தரத்தக்கது. நான் அனுபவிக்கிறேன்’ என்கிறாள். அவளுக்கு 6000 பிராங்க் தருவாகவும் ‘மெமோவை விட்ட விடு’ எனவும் மார்டின் சொல்கிறான். அவள் பணத்தை ஏற்றுக் கொள்வதில்லை. ‘பணம் எனக்கு வேண்டாம். நான் மெமோவுடன் வெளியூர் சென்றுவிட்டு மறுபடியும் உன்னிடம் வருகிறேன். இது போலவே நாம் இருப்போம்’ என்கிறாள்.

அவளை மார்டின் தனது அறைக்கு அழைத்து வருகிறான். மூர்க்கத்தனமாக அவளுடன் பாலுறவில் ஈடுபடுகிறான். பாலுறவு முடிந்த பின், ‘6000 பிராங்க் வேண்டாம். 3000 பிராங்க் கொடு. பாவம் மெமோ, வேலையில்லாமல் இருக்கிறான். பிற்பாடு திருப்பிக் கொடுத்து விடுகிறோம்’ என்கிறாள் சிசிலியா. கோபத்துடன் அவளது தலையை தரையில் மோதுகிறான் மார்டின். ‘நீ என்னைத் துன்புறுத்துகிறாய்’ என்கிறாள் சிசிலியா. பிறபாடு சமநிலைக்கு வரும் அவன் அவளுக்கு 3000 பிராங்க் கொடுத்து முத்தமிட்டு அனுப்பி வைக்கிறான். தான் உடமையாக்க நினைத்த அவள் தன்னிடமிருந்து விலகிப் போவதாகக் கருதும் இவன் அவளது உடமையான நிகழ்வே இப்போது நடந்திருக்கிறது. அவளை மெமோவோடு பயணம் போகவிட அவனுக்கு விருப்பமில்லை. அவளைத் தொடர்ந்து செல்கிறான். அவள் ஏற்கனவே ‘தனது தோழியுடன் வெளியூர் பயணம் போய்விட்டாள்’ என்கிறாள் சிசிலியாவின் தாய். புற்றுநோயினால் வதியும் அவளது தகப்பன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு விடடதாகவும், அவர் சில நாட்களில் மரணமுற்றுவிடுவார் என்கிறாள் தாய். ‘சிசிலியா எவரையுமே நேசித்தில்லை’ என்கிறாள் அவள்.

தறிகெட்ட நிலையில் வாகனத்தைச் செலுத்தும் மார்டின் விலைமாதர் கூடும் நகரின் வெளிக்கு வருகிறான். விலைமாதொருத்தியைப் பணம் கொடுத்து வாகனத்தினுள் அமரச் செய்கிறான். வாகனத்தை ஓட்டியபடி, தனது விறைத்த குறியை வாயினால் உறிஞ்சச் சொல்லியபடி, அவன் தொடைகளுக்கிடையில் குனிந்திருக்கும்  விiமாதுவுக்குக் கட்டளையிட்டபடியே, எதிரில் வரும் மரத்தில் சென்று மோதி விபத்துக்குள்ளாகி உயர்தப்புகிறான் மார்டின். இறுதிக் காட்சி : மருத்துவமனைக் கட்டிலில் காயங்களுடன் படுத்திருக்கும் மார்டின் தாதிப்பெண்ணிடம் ‘ஒரு கடிதம் எழுத உதவ முடியுமா?’ என்கிறான். ‘இன்று நேரமாகிவிட்டது, நாளை பார்க்கலாம்’ எனச் சொல்லிவிட்டு அறையின் திரைச் சீலையை இழுத்துவிட்டபடி அகல்கிறாள் தாதிப் பெண்.

பிரிந்து வாழும் மார்டினது மனைவி அதிகாலைத் தபால்களைக் குனிந்து எடுத்த நடந்தபடி, மார்டினது கடிததத்தைப் படிக்கத் துவங்குகிறாள் :  ‘எவ்வளவுதான் மனமுறிவும் மனக்கசப்பும் நேர்ந்தாலும் வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்…’

ஏழு கதாபாத்திரங்கள். தத்துவப் பேராசிரியன் மார்டின். மனநல மருத்துவரான அவனது  மனைவி சோபியா. முதியவயது ஓவியர் மெயர். பதினேழு வயது சிசிலியா. அவளது நண்பன் மெமோ. சிசிலியாவின் தாய் மற்றும் அவளது தகப்பன். சிசிலியாவினது தாய்க்கும் தகப்பனுக்கும், இவர்களது மகளின் வயது முதிர்ந்த காதலர்களாக வரும் மெயருக்கும் மார்டினுக்கும் இடையிலான உறவும் ஒரு விஸ்தாரமான காட்சியாக இடம்பெறுகிறது. ஓவியர் மெயர் தினந்தோறும் சிசிலியாவின் வீட்டுக்கு வருகிறார். அந்தக் குடும்பத்திற்கு அவர் பணரீதியான உதவியும் செய்கிறார். சிசிலியாவுடனான மெயரின் உறவு அவளது புற்றுநோயினால் மரணமுற இருக்கும் கையறுநிலையிலான அவளது தகப்பனுக்குத் தெரியவும் தெரிகிறது. ஏன், ஒரு வகையில் மார்டினுடனான உறவும் கூட அவருக்குத் தெரியத்தான் செய்கிறது என நம்மால் அனுமானிக்க முடியும். தமது வறிய நிலையிலிருந்து குறைந்த பட்சம் மீண்டுவிடுவதற்கான துயரநிலையில் அதனை பிறிதொரு மேன்மையான, பாலுறவு தவிர்ந்த உறவாகப் புனைந்து கொள்ள வேண்டிய தேவையும் அந்தக் குடும்பத்திற்கு இருக்கிறது. ஒரு வகையில் எளிய குடும்பத்தின் மீதான மெயரினதும் மார்டினதும் பாலுறவுச் சுரண்டல் இது.

படத்தில் பாலுறவு என்பது பல்நபர் – ஒரு பெண் இரு ஆண் –  பாலுறவு என்பதாக மட்டும் இல்லை. மார்டினுக்கும் அவனது மனைவிக்குமான உறவும் இருக்கிறது. அவனிடமிருந்து விலகி நிற்கும் அவனது மனைவி ழான் பவுல் என்பவனுடன் உறவு கொள்ளும் போது, முதலில் அவளை ழான் பவுல் அடிக்கும்போது அது காதலில் விளைந்ததாக அவளுக்குத் தெரிகிறது. பிற்பாடு வெறுப்பிலானதாக அவனது அடிகளை அவனது மனைவி உணரும் போது ழான் பவுலிடமிருந்து அவள் விலகுகிறாள். ஒருத்தியை ஒருவர் உடமை கொள்ள இயலாத போது அல்லது அவள் மீதான பொறாமை பொங்கி வருகிறபோது ஒரு ஆண் பிறிதொரு பெண்ணை அல்லது தனது பிரிவுபட்ட முன் – பெண்துணையைத் தேடுகிறான். மனக் கசப்பில் பிரிந்து விடும் ஆணும் பெண்ணும், மூன்றாம் நபராக ஒரு பெண்ணோ ஆணோ பரஸ்பரமாக இவர்களது வாழ்வில் இடையிடுகிறபோது, பரஸ்பரம் பொறாமையின் பொருட்டு பழைய உறவுகள் மறபடியும் கிளர்ந்தெழவே செய்கிறது. இதற்கு மார்டினோ அல்லது அவனது மனைவியோ விதிவிலக்கு அல்ல என்கிறது திரைப்படம்

சிசிலியாவின் பாத்திரம் கள்ளம் கபடற்ற, நன்மை தீமைக்கு அப்பால் செல்கிற, இளம் பெண்ணின் உடலும், குழந்தைமையின் குரலும் கொண்ட வரலாற்றுக்கு முன்னான (pre-hisitoric) பெண்ணின் சித்திரம் என்கிறார் இயக்குனர் செட்ரிக் கான். அவளுக்கு பொருள் ஒரு பொருட்டாக இல்லை. பாலுறவு என்பது அதிகாரத்திற்கானதாகவோ அல்லது உடமைக்கான சரக்காகவோ அவளுக்குத் தென்படவில்லை. பொருள்-பாலுறவு என்கிற அதிகாரத்தையும் உடமையுணர்வையும் விட்டு விலகிய சுதந்திர மனுஷியாக, அதை அனுபவம் எனும் மட்டத்திலேயே வாழ்ந்து கழிக்கிற, சலிப்பை சலிப்பென மட்டுமே ஏற்று அதனைச் சாவதானமாகக் கடந்துபோகிற பெண்ணாக சிசிலியா இருக்கிறாள். சிசிலியாவின் குடும்பத்தில் மிகநேர்மையாகவே தாயும் மகளும் பொய் சொல்கிறார்கள். அது அவர்களது இயல்பாகவும் ஆற்றுப்படுத்தலாகவும் இருக்கிறது.

பொய் சொல்வது குறித்த குற்ற உணர்ச்சி ஏதும் சிசிலியாவுக்கு இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில் மார்டின் சிசிலியாவிடம், ‘பொய் சொன்னால் உன்னை யாரும் நம்ப மாட்டார்கள் தெரியுமா?’ எனக் கேட்கிறான். இதே வகையில்தான்  ‘இரண்டு ஆண்களிடம் உடலுறவு கொண்டால் அவர்களது விந்து உனது உடலில் கலக்கும், நீ ஒரு வேசை என்பது உனக்குத் தெரியுமா?’ எனவும் கேட்கிறான். இந்த இரண்டு கேள்விகளையும் குற்றவுணர்வோ அல்லது கூச்சமோ அற்ற நிலையில்தான் சிசிலியா எதிர்கொள்கிறான். சிசிலியாவாக நடித்திருக்கும் சோபியா குலேமின் அந்தப் பாத்திரமாக வாழந்திருக்கிறார். பதில்களற்ற அவரது மௌனமும், எதற்கும் இணங்கிப் போகும் அவளது காதலும் எமது மனங்களை கலக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது.

எக்காலத்திலுமான ஆண்களுக்கும், இன்றும் இனியும், சிசிலியா கடக்க முடியாத ஓரு சவாலாகவே இருப்பாள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.