செழியனின் வானத்தைப் பிளந்த கதை

ஈழப் போராட்டம் பற்றிய செழியனின் இந்த நாட்குறிப்புக்கள் நூல் இரு பகுதியிலானது. பக்கம் 93 இல் துவங்கி 220 முடிய, 127 பக்கங்கள் நூலின் துணைத்தலைப்புக்கு ஒப்ப நாட்குறிப்புக்கள் வடிவத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றன. பதிப்புரை, முன்னுரை துவங்கி 93 பக்கம் வரையிலான நூலின் பகுதிகள் Continue Reading →

ஆங்கில மோகமும் அதிகார உருவாக்கமும்

ஆங்கில மொழியின் மேன்மை, அங்கீகாரம் அல்லது அதிகாரம் குறித்து ஒரிரு மாதங்களில் மூன்று தருணங்களில் எதிர்கொள்ள முடிந்தது. ஆங்கில மொழியில் தமிழ் எழுத்துக்கள் வருவதிலும் ஆங்கிலம் பேசுவதால் வரும் அதிகாரம் குறித்ததுமான ஒரு பேராசை இவற்றில் தொனித்ததாக எனக்குத் தோன்றியதால் இக்குறிப்புகள். Continue Reading →

தோழர் ஞானையாவின் ஓட்டத்தைத் தொடர்வோம் : மதியவன் இரும்பொறை

தோழர் ஞானையா தனது இறுதி சாசனத்தில் “நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்துக்கொண்டேன். சித்தாந்தத்தைக் காத்துக்கொண்டேன்” என்ற வரிகளை தனது கல்லறையில் பொறிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தோழர் ஞானையா கிறிஸ்தவப் பின்னணியிலிருந்து வந்தவர். “விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” என்ற விவிலிய வசனத்தை ஒட்டிய அந்த Continue Reading →

இலக்கியவாதி – அரசியல்வாதி – அறிவுஜீவி 

எழுத்தாளனுடைய வாழ்க்கை என்பது அதி பலவீனமானது. அநேகமாக அம்மணமான நடவடிக்கை. அதற்காக நாம் அழுது கொண்டிருக்கத் தேவையில்லை. எழுத்தாளன் தனது தேர்வை மேற்கொள்கிறான். அதில் அவன் உறுதியாக நிற்கிறான். நீங்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் வீசம் காற்றுக்கும் திறந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். சில Continue Reading →

தமிழில் அரசியல் சினிமா

தமிழ் அரசியல் சினிமா வரலாற்றில் இந்திய தேசபக்தியை மறுபடி முன்வைத்து, திரைப்படத்தின் அழகியல் சாத்தியங்களையும் ஸ்வீகரித்துக் கொண்டு, தமிழ் சினிமாவுக்குள் பிரவேசம் செய்தவர் என இயக்குனர் மணிரத்தினத்தை நாம் குறிப்பிடலாம். திராவிட இயக்க சினிமாக்கள் சித்திரித்த இனம், மதம், சாதியம் போன்றவற்றைச் Continue Reading →