நொடி

எட்டுதலைகளுடன் தேவதை முத்தமிட்டுச்சென்றாள் அம்மா தனது மூக்குத்தியை புளியம்பழம் கொண்டு ஒளிரச்செய்தாள் நண்பன் சிந்தச்சிந்த மெதுவாகக் கப்பேசினோ கொண்டு வந்து மேசையில் வைத்தான் ஸ்பானியப் பெண்ணொருத்தி அருகில் வந்து அவனது தலைகோதிப் போனாள் சன்னல்களின் ஊடே ஆரஞ்சுச் சூரியன் கண்ணாடியில் பட்டுத்தெறித்தது Continue Reading →

நாடோடிக் கலைஞனின் முடிவுறாத பயணம்

வரலாறு இப்போது மௌனித்துவிட்டது. நம்மை நாமே அகழ்ந்துகொள்வதன் வழி விடைகாண முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். மௌனத்தில் வாழ்வென்பது சகிக்கவொணாதபடி அவ்வளவு கொடுமையானது. தியோ ஆஞ்ஜலபெலோஸ் /சோவியத் யூனியன் வீழ்ச்சியின் போது * தியோ ஆஞ்ஜலபொலோசின் தி டிராவலிங் பிளேயர்ஸ் படத்தினைப் பார்த்தபோது அவர் Continue Reading →

பூக்கோவின் ஆன்மீக அரசியல்

தத்துவம் சார்ந்த தமது தொலை நோக்கின் அடிப்படையிலும், நிலவிய சமூகத்தில் தாம் பெற்ற அதிருப்தியின் அடிப்படையிலும் தத்துவவாதிகள் பல சமங்களில் சீரழிந்த சமூகத் திட்டங்களுக்கும் அரசியலுக்கும் விமர்சனமற்றுத் தமது ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனமானதும் ஒடுக்குமுறைத்தன்மை கொண்டதுமான அரசியல் திட்டங்களுக்குத் தமது ஆதரவை Continue Reading →

நினைவுகள் மரணிக்கும் போது

இந்நாவல் இலங்கைத் தீவு முழுக்கவுமான மனிதர்கள் பற்றியது. இந்தத் தீவு மனிதர்களின் கடந்த கால வரலாறு இவர்களிடமிருந்து பல்வேறு அன்னியர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. வரலாற்றை மறுவாசிப்பு செய்யப் புறப்பட்ட இவர்கள் – பல வரலாறுகள் பல்கலாச்சார நினைவுகள் பரவிய ஒரு வெளியை Continue Reading →

ஏழு அரசியல் நாவல்கள்

பாரதிநாதனின் ‘தறியுடன்’ தமிழக இடதுசாரி அரசியல் வரலாற்றில் அதிகமும் அறியப்படாத வட ஆற்காடு தர்மபுரி மாவட்டங்களில் மாவோயிஸ்ட்டுகளின் தலைமையில் நடைபெற்ற விசைத்தறித் தொழிலாளர்களின் போராட்டம் பற்றிய நாவல். உணர்ச்சிகரமும் வெகுஜன திரைப்படப் பண்புகளும் கொண்ட இந்த நாவலில் விளிம்புநிலைப் பெண்கள் வெளிப்படுத்தும் Continue Reading →

வாழ்வும் நடைமுறையும்

கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பலருக்குப் பற்பல மனவிசாரங்கள் உண்டு. அவர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள். லௌகீக வாழ்வில் தோற்றுப் போனார்கள். பிறரால் அங்கீரிக்கப்படவில்லை. தேர்ந்து கொண்ட கோட்பாட்டுக்கு ஒப்ப வாழவில்லை. பொதுச்சமூகத்திலிருந்து மறக்கப்பட்டவர்களாக ஆனவர்கள் அவர்கள். இந்த அவதானங்களையும் கழிவிரக்கங்களையும் அவர்களிடம் போய்ச் சொல்லிப் Continue Reading →

ஆர்.பாலகிருஷ்ணன் : மூன்று கவிதைகள்

. எனது பள்ளிநாட்கள் முதல் இன்று வரையிலுமான எனது ஆத்ம நண்பர்கள் மூவர். விசுவநாதன், உதயகுமார், பாலகிருஷ்ணன். எனது  ஆத்மரீதியான அரசியல் தோழமை இருவர். ஒருவர் காலஞ்சென்ற ஜெகநாதன். மற்றவர் ‘விசாரணை’ படத்தின் மூலக்கதை எழுதிய சந்திரகுமார். எனது ஆரம்பப் பள்ளியில் Continue Reading →